search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்த்ரே ரஸல் இல்லாதது சற்று பின்னடைவு: மணீஷ் பாண்டே சொல்கிறார்
    X

    அந்த்ரே ரஸல் இல்லாதது சற்று பின்னடைவு: மணீஷ் பாண்டே சொல்கிறார்

    ஐ.பி.எல். சீசன் 2017-க்கான கொல்கத்தா அணியில் அந்த்ரே ரஸல் இல்லாதது சற்று பின்னடைவாக இருக்கும என மணீஷ் பாண்டே கூறியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான அந்த்ரே ரஸல் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் டி20 லீக் தொடரில் விளையாடி வந்தார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலும் விளையாடி வந்தார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் நம்பிக்கை ஆல்ரவுண்டராக திகழ்ந்து வந்தார்.

    ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாக இவருக்கு ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். சீசன் 2017-ல் அந்த்ரே ரஸல் கலந்து கொள்ளமாட்டார். ஆகவே, அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸை கொல்கத்தா அணி எடுத்துள்ளது.



    அந்த்ரே ரஸல் அணியில் இல்லாதது சற்று பின்னடைவுதான் என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மணீஷ் பாண்டே கூறுகையில் ‘‘சில போட்டிகளில் அந்த்ரே ரஸலின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக எங்கள் அணியில் மேட்ச் வின்னராக இருந்துள்ளார்.

    அவர் இல்லாதது எங்கள் அணிக்கு சற்று பின்னடைவைத் தரும். எங்களிடம் உள்ள மற்ற வீரர்கள் அவரை விட சிறந்தவர்கள் அல்ல. இருந்தாலும் அதே அளவு திறமையுடைய மற்ற வீரர்களை கொண்டு அவரது இடத்தை நிரப்புவோம். சரியான கலவையுடன் களம் இறங்குவோம். இது சிறந்த தொடராக இருக்கப்போகிறது’’ என்றார்.
    Next Story
    ×