search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மண்ணில் கோலியின் முதல் டக்: 5 முறை டெஸ்டில் டக்அவுட் ஆகியுள்ளார்
    X

    இந்திய மண்ணில் கோலியின் முதல் டக்: 5 முறை டெஸ்டில் டக்அவுட் ஆகியுள்ளார்

    தொடர்ந்து நான்கு தொடரில் இரட்டை சதம் அடித்த விராட் கோலி இந்திய மண்ணில் முதல் டக்அவுட் என்ற மோசமான பதிவை பதிவு செய்துள்ளார்.
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் தான் சந்தித்த 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய மண்ணில் முதல் டக்அவுட்டை பெற்றுள்ளார்.

    ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் ஐந்து முறை டக்அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற தனது 2-வது டெஸ்ட் போட்டியில் டக்அவுட் ஆனார்.

    அதேஆண்டில் டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 2-வது முறையாக டக்அவுட் ஆனார்.



    3-வது முறையாக 2014-ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற டெஸ்டிலும், 4-வது முறையாக மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்டிலும் டக்அவுட் ஆகியிருந்தார். அதன்பின் சுமார் 3 வருடங்கள் கழித்து தற்போது 5-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.



    தொடர்ந்து நான்கு தொடரில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விராட் கோலிக்கு இன்று டக்அவுட் ஆனது அணி 105 ரன்னில் ஆல்அவுட் ஆக காரணமாகிவிட்டது.
    Next Story
    ×