search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் இணையத்தள தேடலில் ரொனால்டோ, மான் செஸ்டருக்கு முதலிடம்
    X

    சீனாவில் இணையத்தள தேடலில் ரொனால்டோ, மான் செஸ்டருக்கு முதலிடம்

    சீனாவில் இணைய தளம் மூலம் தேடலில் கிறிஸ்டியானோ ரெனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
    சீன அதிபர் கால்பந்து போட்டிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறார். இதனால் சீனாவில் நடைபெறும் கால்பந்து லீக் தொடருக்கு ஐரோப்பிய கண்டத்தில் உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. கிறிஸ்டியானோ ரொனல்டோவை கூட சீன கிளப் வாங்குவதற்கு தயார் என்று கூறப்பட்டது.

    தற்போது மான்செஸ்டர் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த இங்கிலாந்தின் ரூனே சீன கிளப்பில் விளையாடுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் இணையத் தளம் மூலம் அதிக அளவில் தேடும் கால்பந்து வீரர் மற்றும் கால்பந்து கிளப் அணி எது என்ற சர்வே எடுக்கப்பட்டது.



    இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டா முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் மான்செஸ்டர் யுனைடெட் அணி முதல் இடம் பிடித்துள்ளது.

    அர்செனல் மிட்பீல்டர் மெசுட் ஓசில் 2-வது இடத்தையும், ரியல் மாட்ரிட் அணியின் கரேத் பேலே 3-வது இடத்தையும், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் அந்தோணி மார்சியல் 4-வது இடத்தையும், ரூனே 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றவர்களைவிட 10 மடங்கு அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்.

    அணிகளில் மான்செஸ்டர் யுனைடெட் முதல் இடத்தையும், பெயர்ன் முனிச் 2-வது இடத்தையும், அர்செனல் 3-வது இடத்தையும், லிவர்பூல்  4-வது இடத்தையும், மான்செஸ்டர் சிட்டி 5-வது இடத்தையும் பெற்றுள்ளது.
    Next Story
    ×