search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு துணை கலெக்டர் பதவி
    X

    பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு துணை கலெக்டர் பதவி

    பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டர் பதவி வழங்கியுள்ளார்.
    ஐதராபாத்:

    ரியோ ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு ஆந்திர அரசு சார்பில் 3 கோடி ரூபாயும், தெலுங்கானா அரசு சார்பில் 5 கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    மேலும், குரூப்-1 பிரிவின் அதிகாரி பதவியொன்றை பி.வி. சிந்துவிற்கு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்தது.



    இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை கலெக்டர் பதவி வழங்கியுள்ளார்.

    துணை கலெக்டர் பதவியை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்த பி.வி. சிந்து, தற்போது பணி நியமன ஆணைக்காக காத்திருப்பதாக அவரது தாயார் விஜயா தெரிவித்திருக்கிறார். பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஏற்கனவே பி.வி. சிந்துவிற்கு பணி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×