search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாகூரில் வந்து விளையாடுங்கள்: வெளிநாட்டு வீரர்களுக்கு சோயிப் மாலிக் வேண்டுகோள்
    X

    லாகூரில் வந்து விளையாடுங்கள்: வெளிநாட்டு வீரர்களுக்கு சோயிப் மாலிக் வேண்டுகோள்

    லாகூரில் வந்து விளையாட வேண்டும் என்று கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு சோயிப் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஐ.பி.எல், பிக் பாஷ் டி20 லீக் தொடரைபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.எஸ்.எல். (பாகிஸ்தான் சூப்பர் லீக்) டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.

    தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்காக பி.எஸ்.எல். தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியை பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது.

    இதற்கான எல்லா ஏற்பாட்டையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்து வந்த நேரத்தில் கடந்த 13-ந்தேதி லாகூரில் குண்டு வெடித்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதனால் லாகூரில் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழும்பியது. ஆனால், அணி உரிமையாளர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அணி உரிமையாளர்கள் லாகூர் சென்று விளையாட விருப்பம் தெரிவித்தார்கள்.



    இந்நிலையில் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வெளிநாட்டு வீரர்கள் லாகூர் வந்து விளையாட வேண்டும் என்று சோயிப் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எனது வீட்டிற்கு நான் பாதுகாப்பு வைத்துக் கொள்ளவில்லை. இங்குள்ள வீரர்களுக்கு நான் ஒரு தகவலை தெரியபடுத்துகிறேன், அது என்னவெனில் எனது மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் வரும்போதெல்லாம் அவர் பாதுகாப்பை அமைத்துக் கொள்ளுவதில்லை.

    பிக்பாஷ் போன்ற டி20 லீக் தொடருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரை தொடர்புபடுத்துவது சிறந்ததல்ல என்று நான் நினைக்கிறேன். பிக் பாஷ் தொடருக்குப்பிறகு இந்த தொடர் நல்ல நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த தொடர் சிறப்பு பெற இறைவன் துணைபுரிவார்’’ என்றார்.
    Next Story
    ×