search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே டெஸ்ட்: 11 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்தியா
    X

    புனே டெஸ்ட்: 11 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்தியா

    புனே டெஸ்டில் கடைசி 11 ரன்னுக்குள் 7 வி்கெட்டுக்களை இந்தியா பறிகொடுத்ததால் 105 ரன்னில் சுருண்டு 155 ரன்கள் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்று வருகிறது. முதல் பந்தில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 260 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 47 ரன்னுடனும், ரகானே 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. லோகேஷ் ராகுல் அரைசதத்தை கடந்தார். 33-வது ஓவரை ஓ'கீபே வீசினார். இந்த ஓவர்தான் இந்தியாவிற்கு பெரும் பாதகமாக அமைந்தது. 2-வது பந்தில் லோகேஷ் ராகுல் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.



    4-வது பந்தில் ரகானே 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் சகா அவுட் ஆனார். இதனால் இந்தியா 1 ரன் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் இந்தியாவல் சரிவில் இருந்த மீளமுடியவில்லை.



    அடுத்த ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜெயந்த் யாதவ் மற்றும் ஜடேஜாவை ஓ'கீபே வீழ்த்த இந்தியா 105 ரன்னில் சுருண்டது. 40.1 ஓவர்கள் மட்டுமே இந்தியாவால் தாக்குபிடிக்க முடிந்தது. கடைசி 11 ரன்னில் இந்தியா 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்துக்குள்ளானது. இந்த 7 பேட்ஸ்மேன்களும் 48 பந்துகள் மட்டுமே எதிர்கொள்ள முடிந்தது.
    Next Story
    ×