search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
    X

    ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர்

    புனேவில் நடைபெற்று வரும் முதல் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்துள்ளது. 205 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்த ஆஸ்திரேலியா, ஸடார்க்கின் அதிரடி அரைசதத்தால் 250 ரன்னைத் தாண்டியுள்ளது.

    சுழற்பந்துக்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்த போதும் ஆஸ்திரேலியா இந்த ரன்னை எடுத்துவிட்டது. ரென்ஷா மற்றும் ஸ்டார்க் ஆகியோர் சதம் அடித்தது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியா முதல் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பாங்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இங்கிலாந்திற்கு செல்லும்போது சீம் பந்து பற்று பேச்சு நடக்கிறது. ஆஸ்திரேலியா சென்றால் பவுன்சர் ஆகும் பந்து பற்றி பேச்சு நடக்கிறது. இந்தியாவில் விளையாடும்போது டர்ன் பற்றி பேச்சு நடக்கிறது. நீங்கள் பார்த்தீர்கள் என்றால், முதல்நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்பது அதிகமான ரன்கள்.



    இந்த ஆடுகளத்திலும் ரன்கள் அடிக்க முடியும் என்பதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் காட்டியுள்ளனர். நம்பமுடியாத அளவிற்கு பந்துகள் டர்ன் ஆகவில்லை. இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும்போது ஒருபோதும் இதுபோன்ற குற்றச்சாட்டை எழுப்பியது கிடையாது. ஒரு டெஸ்ட் போட்டியின் இதுஒரு நாள். அவ்வளவுதான்’’ என்றார்.
    Next Story
    ×