search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அபாரமான செயல்பட்ட உமேஷ் யாதவ்
    X

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அபாரமான செயல்பட்ட உமேஷ் யாதவ்

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அபாரமான செயல்பட்ட வேகப்பந்த வீச்சாளர் உமேஷ் யாதவ் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே நன்றாக டர்ன் ஆகியது. அஸ்வின், ஜெயந்த் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ரென்ஷா ஆகியோர் சிறப்பாக விளையாடி விக்கெட்டுக்களை காப்பாற்றினார்கள்.



    28-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இதுதான் அவரது முதல் ஓவர். இந்த ஓவரின் 2-வது பந்தில் வார்னரை க்ளீன் போல்டாக்கினார். இதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார். தனது ரிவர்ஸ் ஸ்விங் பந்து மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.



    விக்கெட் கீப்பர் வடேவை 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றிய உமேஷ் யாதவ், அதன்பின் ஓ'கீபே, நாதன் லயன் ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார். இன்று 12 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 32 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×