search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெயர் குழப்பத்தால் ஐ.பி.எல். வாய்ப்பு இழந்த ஹர்ப்ரீத் சிங்
    X

    பெயர் குழப்பத்தால் ஐ.பி.எல். வாய்ப்பு இழந்த ஹர்ப்ரீத் சிங்

    பெயர் குழப்பத்தால் ஐ.பி.எல். வாய்ப்பை இழந்த சோகம் மத்திய பிரதேச மாநில வீரராக ஹர்ப்ரீத் சிங்கிற்கு உருவாகியுள்ளது.
    மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் வீரர் ஹர்ப்ரீத் சிங். 25 வயதாகும் இவர் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்ற மண்டலத்திற்கு இடையிலான சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நான்கு போட்டிகளில் முறையே 62, 48, 9, 92 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் கடந்த திங்கட்கிழமை (20-ந்தேி நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் எதாவது ஒரு அணி தன்னை தேர்வு செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

    இதே 20-ந்தேதி மும்பை அந்தேரி ரெயில்வே நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் காரை ஓட்டிச்சென்ற வழக்கில் மும்பையைச் சேர்ந்த ஹர்மீத் சிங் என்பவர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். உன்முக் சந்த் தலைமையிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றும்போது ஹர்மீத் சிங் அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் அவர் சிறந்த வகையில் விளையாடாததால் பிரபலம் அடைய முடியவில்லை.

    காரை பிளாட்பாரத்தில் ஓட்டிச்சென்றது ஹர்ப்ரீத் சிங் என பலரால் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. மீடியாக்கள் இதுகுறித்து விளக்கியபோதும் சரியாக சென்றடையவில்லை.

    இந்நிலையில்தான் ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஹர்ப்ரீத் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது. பிளாட்பாரத்தில் காரை ஓட்டிச் சென்றவர் இவர்தான் என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால், ஐ.பி.எல். உரிமையாளர்கள் இவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த ஹர்ப்ரீத் சிங்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.



    இதுகுறித்து ஹர்ப்ரீத் சிங் கூறுகையில் ‘‘நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஒரு கெட்ட பெயர் கிடைத்துள்ளது. நான் எப்படி சரி செய்யப்போகிறேன்?. நீ என்ன செய்தாய் என்று பெரும்பாலான போன் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்ற நினைத்துக் கொண்டிருந்தேன்.

    என்னுடைய பெயர் வந்தபோது, அணி உரிமையாளர்கள் ஏன் இந்த வீரர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஐ.பி.எல். குறித்து நான் கவலையடையவில்லை. ஆனால், கூகிளில் என்னுடைய பெயரை தேடும்போது, நான் கைது ஆகியுள்ளேன் என்ற விஷயம்தான் முதலில் வருகிறது’’ என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×