search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரென்ஷா வெளியேறியதற்கு முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் பார்டர் கண்டனம்
    X

    ரென்ஷா வெளியேறியதற்கு முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் பார்டர் கண்டனம்

    புனே டெஸ்டில் வார்னர் அவுட்டானதும் ரென்ஷா ரிட்டையர் ஹர்ட் (வயிற்று வலி) மூலம் வெளியேறியதற்கு ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. 27.2 ஓவரில் 82 ரன் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 38 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அப்போது 36 ரன்கள் எடுத்திருந்த ரென்ஷா உடல்நல கோளாறு (வயிற்று வலி) காரணமாக வெளியேறினார்.

    இதையாரும் எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக விளையாடி ரென்ஷா வெளியேறியது பின்னர் அந்த அணிக்கு பாதகமாக அமைந்து விட்டது. மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்த பின்னர் ரென்ஷா களமிறங்கி அரைசதம் அடித்தார்.



    இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ரென்ஷா வலியால் அவதிப்பட்டார் என நம்புகிறேன். அப்படியில்லாவிடில், கேப்டனாக நான் மகிழ்ச்சியடைய மாட்டேன். இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. வயிறு கோளாறு ஏற்பட்டிருக்கலாம். வார்னர் அவுட்டான சூழ்நிலையை பயன்படுத்தி, அவர் கழிவறைக்கு சென்றிருக்கலாம்.



    உடல் நலக்கோளாறு தொடர்பான இதுவரை ஒரு பேட்ஸ்மேன் வெளியே சென்றதாக நான் பார்த்ததில்லை. வார்னர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இதுபோன்று நினைத்திருக்க மாட்டார். புதிய பேட்ஸ்மேன் வருவதற்குள் திரும்பி வந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம்.

    ஷேன் மார்ஷ் 15 நிமிடத்திற்குள் அவுட்டாகியிருந்தால், கேப்டனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக ஷென் மார்ஷ் அவுட்டாகவில்லை’’ என்றார்.

    பின்னர் களம் இறங்கிய ரென்ஷா 68 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×