search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது சந்தோஷம்: சேவாக் ஏன் இப்படி சொல்கிறார்?
    X

    டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது சந்தோஷம்: சேவாக் ஏன் இப்படி சொல்கிறார்?

    ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியது மகிழ்ச்சி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன் தனது அனைத்து கேப்டன் பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டார். ஆனால் ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக செயல்படுவேன் என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கும்வரை அசைக்கமுடியாத கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறாததால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ஆனால் இந்த ஐ.பி.எல். தொடருக்கான புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட், விஜய் ஹசாரே தொடருக்கான ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக நியமித்து அழகு பார்த்துள்ளது. நாளை மறுநாள் நடக்கும் போட்டிக்காக அவர் கொல்கத்தா சென்றுள்ளார்.



    ஐ.பி.எல். தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் உள்ளார். டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது சந்தோசம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டோனி கேப்டனாக இல்லாததால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஏனென்றால், தற்போதைய நான் ஆலோசகராக இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் புனே அணியை வீழ்த்த முடியும்.



    முக்கியமான விஷயம் என்னவெனில், டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அந்த அணியின் உள்விவகாரம் என்று நான் நம்புகிறேன். ஆனால், இந்தியாவின் இதுவரை யாரும் நெருங்க முடியாத சிறந்த கேப்டன் டோனி’’ என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த காலத்தில் டோனி 2010 மற்றும் 2011-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் புனே அணி 7-வது இடத்தை பெற்றுள்ளதால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×