search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனே டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க்கின் அதிரடி அரைசதத்தால் ஆஸ்திரேலியா 256/9
    X

    புனே டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க்கின் அதிரடி அரைசதத்தால் ஆஸ்திரேலியா 256/9

    புனேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க்கின் அதிரடி அரைசதத்தால் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் ஓவரில் இருந்தே பந்து நன்றாக டர்ன் ஆகியது. இதனால் 2-வது ஓவரில் இருந்தே இந்தியா சுழற்பந்தை பயன்படுத்தியது.

    மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. 27.2 ஓவரில் 82 ரன் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 38 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அப்போது 36 ரன்கள் எடுத்திருந்த ரென்ஷா உடல்நல கோளாறு காரணமாக வெளியேறினார்.


    அரைசதம் அடித்த ரென்ஷா

    அடுத்து ஸ்மித், ஷேன் மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினார்கள். மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித், ஷேன் மார்ஷ் ஆகியோர் தலா 1 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.


    அஸ்வின் பந்தில் அவுட்டாகி வெளியேறும் ஸ்மித்

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 16 ரன்கள் எடுத்த நிலையில் ஷேன் மார்ஷ் ஜெயந்த் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 22 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் விளையாடிய ஸ்மித் 27 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.


    நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய உமேஷ் யாதவ்

    உடல்நலக் கோளாறால் வெளியேறிய ரென்ஷா மீண்டும் களம் இறங்கினார். அவர் ஒருபுறம் நிலைத்து நிற்க மறுபுறம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மிட்செல் மார்ஷ் 4 ரன்னில் வெளியேற, ரென்ஷா 125 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் பந்தால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிரட்டினார்.

    ஆஸ்திரேலிய வி்க்கெட் கீப்பர் வடே 8 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். ரென்ஷா 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஓ'கீபே, லயன் ஆகியோரை டக்அவுட்டில் வெளியேற்றினார் உமேஷ் யாதவ். ஓ'கீபேயை அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார் விக்கெட் கீப்பர் சஹா.

    ஆஸ்திரேலியா அணி 205 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. 10-வது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஸ்டார்க் அவ்வப்போது பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். அவர் 47 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோரும் 250 ரன்னைத் தொட்டது. ஸ்டார்க், ஹசில்வுட் ஜோடி முதல் நாள் முடியும் வரை ஆஸ்திரேலியாவை அல்அவுட் ஆகாமல் பார்த்துக் கொண்டது.

    இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×