search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஏ’ கிரேடில் இருக்கும் இந்திய வீரர்களின் சம்பளம் ரூ.5 கோடியாக உயர்வு?
    X

    ‘ஏ’ கிரேடில் இருக்கும் இந்திய வீரர்களின் சம்பளம் ரூ.5 கோடியாக உயர்வு?

    ‘ஏ’ கிரேடில் இருக்கும் இந்திய வீரர்களின் சம்பளத்தை ரூ.5 கோடியாக அதிகரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு இணையாக புதுமுக வீரர்கள் கோடிக் கணக்கான விலைக்கு ஏலம் போனார்கள்.

    இந்த நிலையில் இந்திய வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுப்ரீம் கோர்டால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒப்பந்த பட்டியலில் இருக்கும் வீரர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் புஜாரா, இஷாந்த் சர்மா ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகவில்லை.

    இதனால் இது மாதிரியாக வீரர்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தத்தில் ‘ஏ’ கிரேடில் இருக்கும் வீரர்களின் சம்பள ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படுகிறது. ‘பி’ கிரேடில் உள்ள வீரர்களுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படுகிறது. இது ரூ.2 கோடியாக உயர்த்தப்படுகிறது. ‘சி’ கிரேடில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.35 லட்சம் ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது.



    தற்போது ‘ஏ’ கிரேடில் கேப்டன் விராட் கோலி, டோனி, ரகானே, அஸ்வின் ஆகிய 4 வீரர்களே உள்ளனர். இவர்களது சம்பளம் இனி ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.

    ரெய்னா, ரோகித் சர்மா, முரளி விஜய், தவான், அம்பதி ராயுடு, புஜாரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி ஆகிய வீரர்கள் ‘பி’ கிரேடிலும், அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல், ஸ்டுவர்ட் பின்னி, விருத்திமான் சகா, மொகித் சர்மா, வருண் ஆரோன், கரண் சர்மா, ரவிந்திர ஜடேஜா, ராகுல், குல்கர்னி, ஹர்பஜன் சிங், அரவிந்த் ஆகியோர் ‘சி’ கிரேடிலும் ஒப்பந்தத்தில் உள்ளார்.



    ஜடேஜா டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சில் 2-வது இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் ‘சி’ கிரேடில் இருக்கிறார். ஒப்பந்த பட்டியலில் மாற்றி அமைக்கப்படும் போது அவர் முன்னேற்றம் காண்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×