search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி உலகின் ‘நம்பர்1’ பேட்ஸ்மேன்: வார்னே புகழாரம்
    X

    விராட் கோலி உலகின் ‘நம்பர்1’ பேட்ஸ்மேன்: வார்னே புகழாரம்

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் ‘நம்பர்1’ பேட்ஸ்மேன் என்று ஷேன் வார்னே புகழாரம் சூட்டியுள்ளார்.
    ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் ஷேன் வார்னே இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    விராட் கோலி உலகின் ‘நம்பர்1’ பேட்ஸ்மேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அதிவேகத்தில் சர்வதேச போட்டிகளில் சதங்களை எடுத்து வருகிறார். விவியன் ரிச்சர்டஸ், தெண்டுல்கர், லாரா ஆகிய 3 பேரின் கலவையாக கோலி இருக்கிறார். நான் அவரது மிகப்பெரிய ரசிகன். அவரது ஆட்டத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பேன். கேப்டன் பதவியிலும், ஆட்டத்திலும் ஆக்ரோ‌ஷமாக செயல்படுகிறார்.



    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா தொடரை வெல்ல அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எப்போதுமே சவாலானது. சுழற்பந்து வீரர்களான அஸ்வினும், ஜடேஜாவும் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார்கள். இருவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

    ஆஸ்திரேலிய அணியில் சிற்நத கேப்டன்களின் கீழ் நான் விளையாடியது அதிர்ஷ்டமே. ஆலன் பார்டர் தந்தையை போன்றவர். மார்க் டெய்லர் தந்திரமான கேப்டன். அவரது தலைமையின் கீழ் ஆடி இருக்கிறேன். இதே போல ஸ்டீவ்வாக்கும், பாண்டிங்கும் மாறுபட்ட கேப்டன்கள். நான் பந்துவீசிய காலகட்டத்தில் தெண்டுல்கர், லாராவே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள். இருவருக்கும் பந்துவீசுவது மிகவும் கடினமானது.
    Next Story
    ×