search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக செஞ்சூரி அடித்த நியூசிலாந்து வீரர் டெய்லர்: 17 சதம் அடித்து சாதனை
    X

    அதிக செஞ்சூரி அடித்த நியூசிலாந்து வீரர் டெய்லர்: 17 சதம் அடித்து சாதனை

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் டெய்லர், 17-வது சதத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.
    கிறிஸ்ட்சர்ச்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது. 5 ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்திலும் அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

    நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் டெய்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 110 பந்துகளில் 102 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

    180-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய டெய்லருக்கு இது 17-வது சதமாகும். இதன்மூலம் அவர் சாதனை புரிந்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டெய்லர் பெற்றார். இதற்கு முன்பு அந்நாட்டு வீரர் ஆஸ்லே 16 செஞ்சூரி அடித்து இருந்தார்.

    மேலும் டெய்லர் 6 ஆயிரம் ரன்னையும் கடந்தார். அவர் 180 போட்டியில் 6052 ரன் எடுத்து உள்ளார். சராசரி 43.85 ஆகும். அதிகபட்சமாக 131 ரன் குவித்துள்ளார்.

    6 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது நியூசிலாந்து வீரர் டெய்லர் ஆவார். பிளமிங் 8007 ரன்னுடன் (279 போட்டி) முதல் இடத்திலும், ஆஸ்லே 7090 ரன்னுடன் 2-வது இடத்திலும், மேக்குல்லம் 6083 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×