search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
    X

    பெண்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று: சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

    பெண்கள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    பெண்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடர் இலங்கையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - தென்ஆப்பி்ரிக்கா அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 49.4 ஓவரில் 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    3-வது வீராங்கனையாக களம் இறங்கிய டு பிரீஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீராங்கனை 37 ரன்னும், கேப்டன் வான் நீகெர்க் 37 ரன்னும், லுஸ் 35 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் கயாக்வார்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை காமினி 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு வீராங்கனை மேஷ்ரம் 59 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 71 ரன்னும், வேத கிருஷ்ணமூர்த்தி 31 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.

    வேத கிருஷ்ணமூர்த்தி அவுட்டாகும்போது இந்தியா 40.2 ஓவரில் 186 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 58 பந்தில் 59 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட்டுக்கள் இருந்தன.



    ஹர்மன் பிரீத் கவுரை தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஷிகா பாண்டே 12, தேவிகா வைத்யா, சுஷ்மா வெர்மா ஆகியோர் டக்அவுட்டிலும், ஏக்தா பிஸ்ட் 6 ரன்னிலும் அவுட்டாக கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட்டுக்கள் இருந்தன.

    கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓடும்போது பூணம் யாதவ் ரன்அவுட் ஆனார். அடுத்த மூன்று பந்தில் கவுர் ரன் ஏதும் அடிக்கவில்லை. இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைபட்டது. 5-வது பந்தை கவுர் சிக்சருக்கு தூக்கினார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைபட்டது. அந்த பந்தில் கவுர் 2 ரன் அடிக்க இந்தியா கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதனால் 1 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பயின் பட்டம் வென்றது. 71 ரன்கள் சேர்த்த தீப்தி ஷர்மா ஆட்ட நாயகி விருது பெற்றார்.
    Next Story
    ×