search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோலி தலைமையிலான இந்திய அணி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தும்: தெண்டுல்கர்
    X

    கோலி தலைமையிலான இந்திய அணி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தும்: தெண்டுல்கர்

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நீண்ட காலம் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி 19 டெஸ்டில் தொடர்ந்து தோல்வியை சந்திக்கவில்லை. இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது.

    இதில் 4 தொடர் இந்திய மண்ணில் நடந்தது. 2 தொடர் வெளிநாட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நீண்ட காலம் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடந்த கார் பந்தைய போட்டியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    தற்போது உள்ள இந்திய அணி மீது நான் எப்போதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தும். இதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.

    இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். சில அற்புதமான வீரர்களை பார்க்கிறேன். இரண்டு விக்கெட் கீப்பர்கள் (விருத்திமான் சகா, பார்த்தீவ் பட்டேல்) அணியில் இருக்கிறார்கள். இருவருமே ரன்களை குவிக்க கூடியவர்கள். அணி சிறப்பான நிலையில் இருக்கும் போது முடிவும் நன்றாக அமையும்.

    கிரிக்கெட்டின் ஒவ்வொரு கால கட்டத்திலும் தலைமுறைக்கு ஏற்றவாறு சகாப்தமும் மாறுபட்டு இருக்கிறது. தற்போதைய தலைமுறையில் உள்ளவர்கள் அற்புதமான சாதனைகளை படைத்துள்ளார்கள். ஆனால் அதை வெவ்வேறு காலத்துடன் ஒப்பிட இயலாது. ஒவ்வொரு தலை முறையிலும் ஒவ்வொரு சாதனைகள் படைக்கப்பட்டு இருக்கும். நாம் அதை மதிக்க வேண்டும்.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    Next Story
    ×