search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி பந்து வீச்சாளர்களுடைய கேப்டன்: உமேஷ் யாதவ் சொல்கிறார்
    X

    விராட் கோலி பந்து வீச்சாளர்களுடைய கேப்டன்: உமேஷ் யாதவ் சொல்கிறார்

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சாளர்களுடைய கேப்டன் என்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையில் டெஸ்ட் அணியில் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி வீறுநடை போட்டு வருகிறது. 20 விக்கெட்டுக்களை வீழ்த்தினால்தான் டெஸ்டில் வெற்றி பெற முடியும் என்பதால் பந்து வீச்சுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவிற்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அவரும் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

    விராட் கோலியைப் பற்றி உமேஷ் யாதவ் கூறுகையில் அவர் பந்து வீச்சாளர்களுடைய கேப்டன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலி பந்து வீச்சாளர்களின் கேப்டன். அவர் எந்தவொரு பந்து வீச்சாளரையும் பந்து வீச அழைக்கும்போது, உங்களுடைய யோசனையின்படி பீல்டிங் அமையுங்கள் என்று சொல்வார்.

    என்னிடம் பந்தை கொடுக்கும்போது, என்னுடைய திட்டம் என்ன? அல்லது முக்கியமான இடத்தில் பீல்டரை நான் நிறுத்த வேண்டுமா? என்று கேட்பார். உங்களுடைய நோக்கத்திற்கும், திட்டத்திற்கும் பின்னால் அவர் நிற்பார். உங்களுடைய திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே, உங்களிடம் வந்து, மாற்று திட்டத்தைக் கூறுவார். நான் திட்டம் ஏ-ஐ செயல்படுத்த அனுமதி பெறுவேன். அது சரியாக வேலை செய்யவில்லை எனில் திட்டம் பி-ற்கு செல்வேன்’’ என்றார்.
    Next Story
    ×