search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில ஆக்கி போட்டி: அரை இறுதியில் சென்னை பல்கலைகழகம்- வருமானவரி மோதல்
    X

    மாநில ஆக்கி போட்டி: அரை இறுதியில் சென்னை பல்கலைகழகம்- வருமானவரி மோதல்

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டியின் அரை இறுதியில் சென்னை பல்கலைகழகம்- வருமானவரி அணிகள் இன்று மோதுகின்றனர்.
    சென்னை:

    வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு கால்இறுதியில் சென்னை பல்கலைக்கழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. இன்னொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை சாய்த்து அரைஇறுதியை எட்டியது. மத்திய கலால் வரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதியை உறுதி செய்தது.

    இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் வங்கி-மத்திய கலால் வரி (பிற்பகல் 2 மணி), சென்னை பல்கலைக்கழகம்-வருமான வரி (பிற்பகல் 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×