search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் பந்து வீச்சை சந்திக்க தயார்: டேவிட் வார்னர்
    X

    அஸ்வின் பந்து வீச்சை சந்திக்க தயார்: டேவிட் வார்னர்

    இந்திய அணி முன்னணி வீரர் அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி என்பதற்காக திட்டம் தங்களிடம் இருப்பதாகவும், இதனால் அவரது பந்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் மும்பை பிரா போர்ன் மைதானத்தில் நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி என்பதற்காக திட்டம் தங்களிடம் இருப்பதாகவும், இதனால் அவரது பந்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட்வார்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளரை நான் மிகவும் மதிக்கிறேன். நல்ல பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். அவருக்கு எதிராக ஒழுக்கமும், அடக்கமாகவும் நான் இருப்பேன்.

    பந்து வீச்சில் அஸ்வினின் பலத்தை அறிவோம். அவரது பந்து வீச்சை எப்படி சமாளிப்பது என்பதற்கான ஒரு திட்டம் வைத்துள்ளோம். அவரது பந்து வீச்சை சந்திக்க நாங்கள் தயார் சூழ்நிலையில் தகுந்தவாறு விளையாடுவேன்.

    இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். அனைத்து நிலைகளிலும் சிறப்பாக விளையாடுவார். விராட் கோலி வரிசையில் ஜோரூட், ஸ்டீவ் சுமித், டு பிளிஸ்சிஸ் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் உதாரணமாக கோலியின் சதங்கள் உள்ளன.

    இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

    30 வயதான அஸ்வின் சொந்த மண்ணில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரில் 61 விக்கெட்டுகளை (9 போட்டி) கைப்பற்றி முத்திரை பதித்து இருந்தார்.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டில் 27 விக்கெட்டும், இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்டில் 28 விக்கெட்டும், வங்காளதேசத்துக்கு எதிராக ஒரே டெஸ்டில் 6 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரிலும் அஸ்வின் விக்கெட்டுகளை குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    Next Story
    ×