search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையோர் கிரிக்கெட்: இந்திய அணி 431 ரன்கள் குவிப்பு
    X

    இளையோர் கிரிக்கெட்: இந்திய அணி 431 ரன்கள் குவிப்பு

    19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நேற்யை ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 431 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
    நாக்பூர் :

    19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 501 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாளான நேற்று 8 விக்கெட்டுக்கு 431 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டேரில் பெராரியோ (117 ரன்) சதம் அடித்தார்.

    அடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
    Next Story
    ×