search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை ‘ஒயிட்வாஷ்’ ஆனது: 5-வது போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி
    X

    இலங்கை ‘ஒயிட்வாஷ்’ ஆனது: 5-வது போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி

    5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா
    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் பகல்- இரவாக நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்தது. தொடக்க வீரர்களான ஹசிம் அம்லா (154 ரன்), குயிண்டன் டி காக் (109 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். லக்மல் 3 விக்கெட்டும் மதுசங்கா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 88 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குணரத்னே சதம் (114 ரன்) அடித்தார். அது பலன் இல்லாமல் போனது. கிறிஸ்மோரிஸ் 4 விக்கெட்டும், பர்னல் 2 விக்கெட்டும், இம்ரான் தாகீர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 5-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வென்று இலங்கையை ‘ஒயிட்வாஷ்’ செய்தது. இதன் மூலம் அந்த அணி நம்பர் 1 இடத்தை பிடிக்கிறது. இலங்கை அணியால் ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் போனது பரிதாபமே.

    ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே வென்று இருந்தது. 20 ஓவர் தொடரை மட்டும் இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    Next Story
    ×