search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சைக்குரிய முடிவு: இந்தியாவை சேர்ந்த நடுவர் ஷம்சுதீன் விலகல்
    X

    சர்ச்சைக்குரிய முடிவு: இந்தியாவை சேர்ந்த நடுவர் ஷம்சுதீன் விலகல்

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடரை தீர்மானிக்கும் வகையில் நடந்த இந்த ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்ற இருந்த ஷம்சுதீன் விலகிக் கொண்டார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.

    இந்த தொடரை தீர்மானிக்கும் வகையில் நடந்த இந்த ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்ற இருந்த இந்தியாவை சேர்ந்த ஷம்சுதீன் விலகிக் கொண்டார். நாக்பூரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியின் போது இங்கிலாந்து முன்னணி வீரர் ஜோ ரூட்டுக்கு தவறான எல்.பி.டபிள்யூ. கொடுத்தார்.

    அதாவது பேட்டில் பட்டு அதன் பிறகு காலுறையில் பட்ட பந்துக்கு விரலை உயர்த்தி விட்டார். அவரது செயல்பாட்டை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வெளிப்படையாக கண்டித்தார். அவரால் தான் தங்களது அணி தோற்று விட்டதாகவும், இது குறித்து ஐ.சி.சி.யிடம் முறையிடுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும் இதே நாக்பூர் ஆட்டத்தில் விராட் கோலி 7 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது நல்ல எல்.பி.டபிள்யூ. வாய்ப்பை நிராகரித்ததும் விமர்சிக்கப்பட்டது.

    இந்த சர்ச்சை எதிரொலியாக கடைசி நேரத்தில் அவர் பின்வாங்கிக்கொண்டார். இதையடுத்து 3-வது 20 ஓவர் போட்டியில் அவருக்கு பதிலாக நிதின் மேனன், அனில் சவுத்ரியுடன் இணைந்து கள நடுவர் பணியை கவனித்தார். டி.வி. நடுவராக ஷம்சுதீன் அமர்த்தப்பட்டார்.
    Next Story
    ×