search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ்
    X

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் பார்போராவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
    மெல்போர்ன்:

    கிரான்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்று ஆட்டத்தில் செக் குடியரசுவை சேர்ந்த 16-ம் நிலை வீராங்கனை பார்போராவை எதிர் கொண்டார்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். 11-வது முறையாக அவர் ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    செரீனா வில்லியம்ஸ் காலிறுதி ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னாவை (இங்கிலாந்து) சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் 30-வது வரிசையில் இருக்கும் மகரோஹவை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    மற்ற காலிறுதி ஆட்டத்தில் முகுருஜா (ஸ்பெயின்)- கோகோ வான்ட்வெக் (அமெரிக்கா) வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)- அனஸ்டசியா (ரஷியா) மோதுகிறார்கள்.

    இன்னொரு காலிறுதியில் மோதும் விவரம் இன்று தெரியவரும்.

    ஆண்கள் பிரிவை பொறுத்தவரை உலகின் முதல்நிலை வீரரான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து), இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தனர்.

    13-ம் நிலை வீரரான சோங்கா (பிரான்ஸ்) 6-7 (4-7), 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டேனியல் இவான்சை (இங்கிலாந்து) வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் 4-ம் நிலை வீரரான வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) எதிர்க்கொள்கிறார்.

    இன்னொரு காலிறுதியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- மிஸ்ச்சா சுவேரா (ஜெர்மனி) மோதுகிறார்கள். மற்ற இரண்டு காலிறுதியில் வீரர்கள் மோதும் விவரம் இன்று தெரியும். 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த மான்பில்சை சந்திக்கிறார்.
    Next Story
    ×