search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-1 எனத் தொடரை கைப்பற்றியது
    X

    4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-1 எனத் தொடரை கைப்பற்றியது

    சிட்னியில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் மூன்று போட்டிகள் முடிவின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.


    மேக்ஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு விளாசும் காட்சி

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவாஜா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவாஜா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் அடுத்து வந்த ஸ்மித் 48 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ஆனால் வார்னர் சிறப்பாக விளையாடி 119 பந்தில் 130 ரன்கள் குவித்தார்.


    ஷர்ஜீல்கான் பந்தை சிக்ருக்கு தூக்கிய காட்சி

    அதன்பின் வந்த ஹெட் 51 ரன்னும், மேக்ஸ்வேல் 44 பந்தில் 78 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    சோயிப் மாலிக் பந்தை எதிர்கொள்ளும் காட்சி

    பின்னர் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் அசார் அலி, ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தாலும் ஷர்ஜீல் கான் 74 ரன்னும், பாபர் ஆசம் 31 ரன்னும், மொகமது ஹபீஷ் 40 ரன்னும், சோயிப் மாலிக் 47 ரன்னும் எடுத்து அணிக்கு சற்று நம்பிக்கை ஊட்டினர்.


    ஹபீஸ் பந்தை கட் செய்யும் காட்சி

    ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் வெளியேற பாகிஸ்தான் அணி 43.5 ஓவரில் 267 ரன்கள் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் ஆடம் சம்பா, ஹசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



    விக்கெட் வீழ்த்திய சம்பாவை பாராட்டும் சக வீரர்கள்

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 எனக்கைப்பற்றி முன்னிலைப் பெற்றுள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி 26-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.
    Next Story
    ×