search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான விபத்தில் சிக்கிய பிரேசில் கால்பந்து வீரர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்பு
    X

    விமான விபத்தில் சிக்கிய பிரேசில் கால்பந்து வீரர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்பு

    விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த 3 பிரேசில் கால்பந்து வீரர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்றனர். இது குறித்து விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.

    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசிலை சேர்ந்த சாபேகோயன்ஸ் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்கள் இறுதிபோட்டியில் பங்கேற்க கொலம்பியாவுக்கு விமானத்தில் சென்றனர். அந்த விமானம் விபத்துக்குள்ளாகி நெறுங்கியது. அதில் 71 பேர் பலியானர்.

    அவர்களில் கால்பந்து அணியை சேர்ந்த 19 வீரர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர். கால்பந்து அணியை சேர்ந்த 3 வீரர்கள் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

    இந்த நிலையில் வீரர்களை இழந்த சாபேகோயன்ஸ் கால்பந்து அணியில் புதிதாக 22 வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் விமான விபத்துக்கு பிறகு சாபேகோவில் உள்ள அரீனா கோண்டா மைதானத்தில் முதன் முறையாக கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடினர்.

    விமான விபத்தில் உயிர் பிழைத்த 3 வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசு கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. 20 ஆயிரம் ரசிகர்கள் இவர்களது விளையாட்டை கண்டுரசித்தனர். விமான விபத்தில் உயிர்பிழைத்த ரேடியோ நிருபர் ரபேல் கென்செல் போட்டி வர்ணனையாளராக இருந்தார்.

    Next Story
    ×