search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
    X

    4-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது
    சிட்னி:

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டியில் ஆடாத பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி அணிக்கு திரும்புகிறார். 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றி விடும்.

    எனவே அந்த அணியினர் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டுவார்கள். அதேநேரத்தில் தோல்வி கண்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், அதனை தடுக்க பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×