search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சையத் முஸ்தாக் அலி டி20 டிராபி: டெல்லி அணியில் தவான், இசாந்த் ஷர்மா சேர்ப்பு
    X

    சையத் முஸ்தாக் அலி டி20 டிராபி: டெல்லி அணியில் தவான், இசாந்த் ஷர்மா சேர்ப்பு

    சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடருக்கான டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் இசாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான, சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஷிகர் தவான் மற்றும் இசாந்த் ஷர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தவான் இடம்பிடித்துள்ளார். ஆனால், டி20 கிரிக்கெட் தொடரில் தவான் சேர்க்கப்படவில்லை.

    இசாந்த் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் அவரும் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணியின் அதிரடி வீரரான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அர்ஜுன் குப்தா விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். கவுதம் காம்பீர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

    1. கவுதம் காம்பீர் (கேப்டன்), 2. உன்முக்த் சந்த், 3. ஷிகர் தவான், 4. நிதிஷ் ராணா, 5. மிலிந்த் குமார், 6. ஷர்மா, 7. சர்தாக் ரஞ்சன், 8. அர்ஜூன் குப்தா (விக்கெட் கீப்பர்). 9. பவன் நெஹி, 10. மனன் ஷர்மா, 11. இசாந்த் ஷர்மா, 12. நவ்தீப் சைனி, 13. விகாஸ் டோகாஸ், 14. பிரதீப் சங்வான், 15. சுபோத் பாதி.
    Next Story
    ×