search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசி. அணியில் விக்கெட் கீப்பர் ப்ளண்டெல் சேர்ப்பு
    X

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசி. அணியில் விக்கெட் கீப்பர் ப்ளண்டெல் சேர்ப்பு

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சேப்பல் - ஹெட்லி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் ப்ளண்டெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    சேப்பல் - ஹெட்லி என்று பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் 30-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 5-ந்தேதியும் நடக்கிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணில் ஆபரேசன் செய்து கொண்ட ராஸ் டெய்லர், வங்காள தேச அணிக்கெதிரான தொடரில் இடம்பெறவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அவர் இடம்பிடித்துள்ளார்.

    அதேபோல் விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி வங்காள தேச தொடரின்போது காயம் அடைந்தார். அவருக்குப்பதிலாக விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெல் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் ப்ளண்டெல் அறிமுகமானார். ஆனால், அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார். முதுகு வலி காரணமாக நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வரும் கோரி ஆண்டர்சன் அணியில் சேர்க்கப்படவில்லை.

    ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. டாம் ப்ளண்டெல் (விக்கெட் கீப்பர்), 3. ட்ரென்ட் போல்ட், 4. நீல் ப்ரூம், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. பெர்குசன், 7. மார்ட்டின் கப்தில், 8. மாட் ஹென்றி, 9. டாம் லாதம், 10. கொலின் முன்றோ, 11. ஜிம்மி நீசம், 12. மிட்செல் சான்ட்னெர், 13. டிம் சவுத்தி, 14. ராஸ் டெய்லர்.
    Next Story
    ×