search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காளதேசம் 289 ரன்களில் சுருண்டது
    X

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காளதேசம் 289 ரன்களில் சுருண்டது

    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களில் சுருண்டது.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களில் சுருண்டது.

    நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய வங்காளதேச அணியின் துவக்க வீரர் தமீம் இக்பால் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமதுல்லா 19 ரன்களில் வெளியேறினார்.

    இதையடுத்து சவுமியா சர்க்கார்- சாகிப் அல் அசன் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அபாரமாக விளையாடிய சவுமியா சர்க்கார் 86 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சாகிப் 59 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின்னர் நியூசிலாந்தின் சிறப்பான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.

    நுருல் ஹசன் (47 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, வங்காள தேச அணியின் முதல் இன்னிங்ஸ் 289 ரன்களில் முடிவுக்கு வந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். போல்ட் 4 விக்கெட்டும், வாக்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.
    Next Story
    ×