search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டூவர்ட் பிராட்டின் லெவன் அணியில் சச்சினுக்கு இடம்: சங்ககரா, இம்ரான்கான் இல்லை
    X

    ஸ்டூவர்ட் பிராட்டின் லெவன் அணியில் சச்சினுக்கு இடம்: சங்ககரா, இம்ரான்கான் இல்லை

    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டின் லெவன் அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம் கொடுத்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் தனது மிகச்சிறந்த ஆடும் வெலன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு இடம்கொடுத்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாராவிற்கும் இடம் கொடுத்துள்ளார்.

    ஸ்டூவர்ட் பிராட்டின் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

    1. அலைஸ்டர் குக் (கேப்டன்). 2. மேத்யூ ஹெய்டன், 3. ரிக்கி பாண்டிங், 4. சச்சின் தெண்டுல்கர், 5. பிரையன் லாரா, 6. ஜேக்யூஸ் கல்லிஸ், 7. மேத்யூ பிரியர் (விக்கெட் கீப்பர்), 8. சர் ரிச்சார்டு ஹேட்லி, 9. ஷேன் வார்னே (துணை கேப்டன்), 10. கிளென் மெக்ராத், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    விக்கெட் கீப்பராக மேத்யூ பிரியரை தேர்வு செய்துள்ளார். தலைசிறந்த பிராண்டன் மெக்கல்லம், இலங்கையின் சங்ககரா மற்றும் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோரை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×