search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது சுற்றுக்கு முன்னேறிய நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர்.
    X
    3-வது சுற்றுக்கு முன்னேறிய நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர்.

    ஆஸ்திரேலிய ஓபன்: கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கெர்பர், வீனஸ் வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான கெர்பர் (ஜெர்மனி) 2-வது சுற்று ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த கரீனா விதோப்டை எதிர்க்கொண்டார்.

    இதன் முதல் செட்டை கெர்பர் 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால் 2-வது செட்டில் கரீனா சிறப்பாக விளையாடி 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றினார். கடைசி செட்டை கெர்பர் 6-3 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-2, 6-7 (3-7), 6-3.

    13-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றில் ஸ்டெபானியை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

    மற்ற ஆட்டங்களில் 11-ம் நிலை வீராங்கனை எலீனா சுவிட் டோலினா (உக்ரைன்), 8-ம் நிலை வீராங்கனை குஷ்னெட் சோவா( ரஷியா), கனஸ்டசியா (ரஷியா) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    உலகின் 5-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 2-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த ஜெர்மி சார்டியை எதிர்க்கொண்டார். இதில் நிஷிகோரி 6-3, 6-4, 6-3 என்ற கணக்கில் வென்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 12-ம் நிலை வீரர் சோங்கா (பிரான்ஸ்) 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் செர்பியா வீரர் லஜோவிக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×