search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர்களாக பனேசர், ஸ்ரீராம் நியமனம்
    X

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர்களாக பனேசர், ஸ்ரீராம் நியமனம்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர்களாக பனேசர், ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மெல்போர்ன்:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்ரவரி 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்பட்டால் விக்கெட்டுகளை சாய்க்க முடியும் என்பது குறித்து ஆலோசனை பெற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதன்படி 2012-13-ம் ஆண்டில் நடந்த இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்டு 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய 34 வயதான சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருந்த தமிழக முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான 40 வயதான ஸ்ரீராம் ஆகியோர் இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    Next Story
    ×