search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் புகழாரம்
    X

    விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் புகழாரம்

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் விராட் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 350 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோரின் அதிரடியான சதமே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டம் ஆகிய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார். வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர். அவரது பேட்டிங் அனைவரையும் மெய்சிலிரிக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசிர் உசேன் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுடன் ஒப்பிட்டு உள்ளார்.

    கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் கேப்டனாக இருந்து விராட் கோலி பேட்டிங்யில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்.

    63 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்த அணி 351 ரன் இலக்கை எடுப்பது என்பது சாதாரணமானது இல்லை. கால்பந்தில் எப்படி ரொனால்டோ ஜாம்பவானாக தற்போது இருக்கிறாரோ அதுபோல கிரிக்கெட்டில் விராட் கோலி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×