search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா, கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், கரோலினா 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 6 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெலின்டா பெனிக்கை எதிர்க்கொண்டார். இதில் செரீனா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிலிஸ்சோவா (செக்குடியரசு), 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சாராவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். 9-ம் நிலை வீராங்கனை ஜோகன்னா (இங்கிலாந்து) 21-ம் நிலை வீராங்கனை கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ‌ஷபரோவா (செக்குடியரசு), மகரோவா (ரஷியா) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    உலகின் 3-ம் நிலை வீரரான மிலோஸ் ரோனிக் (கனடா) முதல் சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த டஸ்டின் பிரவுனை எதிர்க்கொண்டார். இதில் ரோனிக் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 25-ம் நிலை வீரர் சிமோன் (பிரான்ஸ்), ராபின் ஹாஸ் (நெதர்லாந்து), ரோஜிரியா சில்வா (பிரேசில்), டொனால்டு யங் (அமெரிக்கா) ஆகியோர் வென்று 2-வது சுற்றில் நுழைந்தனர்.
    Next Story
    ×