search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது கடினம்: விராட் கோலி
    X

    தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது கடினம்: விராட் கோலி

    கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது சாத்தியமில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
    மும்பை:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போடடியில் விராட் கோலி சதம் அடித்து முத்திரை பதித்தார். 177-வது ஒருநாள் போட்டியில் விளையாடி 27-வது சதத்தை பதிவு செய்தார். 2-வது இன்னிங்சில் அதாவது சேசிங்கில் விராட் கோலி 17 செஞ்சுரியை எடுத்து தெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார். இதில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் (15) எடுத்த தெண்டுல்கரின் சாதனையை முறயடித்தார்.

    விராட் கோலிக்கு தற்போது 28 வயதுதான் ஆகிறது. இதே திறமையுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் விளையாடினால் அவர் தெண்டுல்கரின் அனைத்து சாதனைகளையும் தகர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது சாத்தியமில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார். இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கருடன் என்னை ஒப்பிட்டு வருவது எந்த விதத்திலும் நியாயமில்லை. அவரை போன்று 24 ஆண்டுகாலம் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாட இயலாது. 100 சதம் அடிக்க முடியாது. அவரது சாதனைகள் நம்ப முடியாதவை.

    தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். அவரது சாதனையை எட்டுவது சாத்தியமில்லை.

    ஆனால் நான் அதிலும் மாறுபட்டவனாக இருக்கவே விரும்புகிறேன். நான் போட்டியை விட்டு செல்லும்போது சிறப்பான நிலையிலேயே செல்வேன்.

    நெருக்கமான நபர்கள் நிறையபேர் நம்மை சுற்றி வைத்துக்கொள்ளும்போது கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. மேலும் அதற்காக கூடுதல் நேரத்தையும் செலவிட வேண்டியது வரும்.

    அதனால்தான் அதிர்ஷ்டவசமாக நெருக்கமான நிறையபேரை நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுவே எனது வெற்றியின் ரகசியம்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
    Next Story
    ×