search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கம்
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கம்

    தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
    மெல்போர்ன் :

    மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

    இதனால் தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

    கழுத்தில் காயத்தால் அவதிப்படும் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் இந்த ஆட்டத்தில் மட்டும் விளையாடமாட்டார். இதை கருத்தில் கொண்டு பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஏற்கனவே அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×