search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷிமோனா ஹெலப் அதிர்ச்சி தோல்வி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷிமோனா ஹெலப் அதிர்ச்சி தோல்வி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷிமோனா ஹெலப் 3-6, 1-6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

    தொடக்க நாளிலே முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஷிமோனா ஹெலப் அதிர்ச்சிகரமாக வெளியேறினார். உலகின் 4-ம் நிலை வீராங்கனையான அவர் முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஷெல்பி ரோஜர்சை எதிர்கொண்டார். இதில் ஹெலப் 3-6, 1-6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    7-ம் நிலை வீராங்கனையான கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) முதல் சுற்றில் 7-5, 6-4 என்ற கணக்கில் மரினாவை (நியூசிலாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6, (7-5), 7-5 என்ற நேர்செட் கணக்கில் கேத்ரினாவை (உக்ரைன்) வீழ்த்தினார்.

    உலகின் 5-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 5-7, 6-1, 6-4, 6-7 (6-8), 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு குஸ்னெட் கோவை (ரஷியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 10-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), டொமினிக் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வென்றனர்.
    Next Story
    ×