search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்
    X

    இந்திய டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்

    இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் உள்பட நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.
    ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    நாதன் லயன்

    16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), 2. வார்னர், 3. ரென்ஷா, 4. கவாஜா, 5. ஷான் மார்ஷ், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. கிளென் மேக்ஸ்வெல், 8. மேத்யூ வடே (விக்கெட் கீப்பர்), 9. மிட்செல் மார்ஷ், 10. அஷ்டோன் அகர், 11. ஸ்டீவ் ஓ'கீபே, 12. மிட்செல் ஸ்டார்க், 13. மிட்செல் ஸ்வெப்சன், 14. ஜோஷ் ஹசில்வுட், 15. ஜேக்சன் பேர்டு, 16. நாதன் லயன்.


    மேக்ஸ்வெல்

    இதில் மேக்ஸ்வெல், ஓ'கீபே, மிட்செல் ஸ்வெப்சன் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாவார்கள். இதில் ஸ்வெப்சன் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது. முதன்முறையாக இந்திய தொடருக்கான இடம்பிடித்துள்ளார்.


    அஷ்டோன் அகர்

    இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
    Next Story
    ×