search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த ஆஸி. அணி
    X

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த ஆஸி. அணி

    நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. இதற்கான அணியை பாண்டிங் அறிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்திய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த அணி துபாய் சென்று பயிற்சி எடுக்க உள்ளது. இந்திய தொடரில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவு வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானும் ஆன ரிக்கி பாண்டி தனது ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளார்.

    அவரது அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல், ஹெட் மற்றும் ஆஷ்டோன் அகர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். அவர்களுடன் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான நாதன் லயன் மற்றும் ஓ'கீபே ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்தியா தொடருக்கான ரிக்கி பாண்டியின் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டெவிட் வார்னர், 2. ரென்ஷா, 3. கவாஜா, 4. ஸ்மித், 5. ஹேண்ட்ஸ்காம்ப், 6. மிட்செல் மார்ஷ், 7. வடே, 8. மிட்செல் ஸ்டார்க், 9. ஸ்டீவ் ஓ'கீபே, 10. ஹசில்வுட், 11. நாதன் லயன், 12. ஷேன் மார்ஷ், 13. ஜேக்சன் பேர்டு, 14. கிளென் மேக்ஸ்வெல், 15. ட்ராவிஸ் ஹெட், 16. ஆஷ்டோன் அகர்.

    நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
    Next Story
    ×