search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி பட்டம் வெல்லுமா?
    X

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி பட்டம் வெல்லுமா?

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    லக்னோ:

    11-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. 16 அணிகள் இடையிலான இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது.

    இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. 2001-ம் ஆண்டில் பட்டம் வென்ற இந்திய அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. 1997-ம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு 2-வது இடம் பிடித்து இருந்தது.

    பெல்ஜியம் அணி கால் இறுதியில் அர்ஜென்டினாவையும், அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஜெர்மனியையும் பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியும், இந்திய அணி, கால் இறுதியில் ஸ்பெயினையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் பெனால்டி ஷூட்-அவுட்டில் சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்து உள்ளன. ஹர்ஜீத்சிங் தலைமையிலான இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. உள்ளுர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். அதேநேரத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறது. எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெவிலிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×