search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல் கால்பந்து: இறுதிப்போட்டியில் கொல்கத்தா- கேரளா மோதல்
    X

    ஐ.எஸ்.எல் கால்பந்து: இறுதிப்போட்டியில் கொல்கத்தா- கேரளா மோதல்

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி கொச்சியில் நடக்கிறது. இதில் கேரளா அணி கொல்கத்தாவுடன் மோதுகிறது.
    புதுடெல்லி:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெனால்டி ஷூட் டில் 3-0என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டியில் கேரளா அணி கொல்கத்தாவுடன் மோதுகிறது. கொல்கத்தா அணி அரை இறுதி சுற்று போட்டிகளில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி கொச்சியில் நடக்கிறது. இவ்விறு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது 2-வது முறையாகும்.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்து மகுடம் சூடியது. 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் கொல்கத்தா உள்ளது. இதே போல் 2014-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பதிலடி கொடுக்க கேரளாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

    Next Story
    ×