search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் இன்று மோதல்
    X

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் இன்று மோதல்

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வரும் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இந்திய அணி, ஸ்பெயினை (மாலை 6 மணி) சந்திக்கிறது.
    லக்னோ :

    11-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. 16 அணிகள் இடையிலான இந்த போட்டியில் நேற்று நடந்த 9 முதல் 12 இடங்களுக்கான ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்க அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. 13 முதல் 16 இடங்களுக்கான ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.

    இன்று (வியாழக்கிழமை) கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய அணி, ஸ்பெயினை (மாலை 6 மணி) சந்திக்கிறது. இந்திய அணி லீக் ஆட்டங்களில் கனடா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை தோற்கடித்தது.

    3-வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் டிரா கண்டும் கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. முன்னதாக நடைபெறும் மற்ற கால்இறுதி ஆட்டங்களில் பெல்ஜியம்-அர்ஜென்டினா (பகல் 11.15 மணி), ஜெர்மனி-இங்கிலாந்து (பகல் 1.30 மணி), ஆஸ்திரேலியா-நெதர்லாந்து (மாலை 3.45 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×