search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோனியுடன் கருத்து வேறுபாடா? கவுதம் கம்பீர் பதில்
    X

    தோனியுடன் கருத்து வேறுபாடா? கவுதம் கம்பீர் பதில்

    கம்பீருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து கம்பீர் கூறியதாவது, தோனி சிறந்த வீரர், நல்ல மனிதர். எங்களுக்குள் மோதல் இல்லை என்று தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடிகட்டி பறந்தவர் கவுதம் கம்பீர். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லவும் கம்பீரின் பங்கு அளப்பறியது. அண்மைக்காலமாக மோசமான பார்மில் இருப்பதால் அணியில் இருந்து ஓரங்கப்பட்டார்.

    நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும் நடைபெற்று முடிந்த நீயூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டார். வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீணடித்ததால் மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    கவுதம் கம்பீருக்கும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக  ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த விவாதங்கள் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நாட்களும் உண்டு.

    இந்த நிலையில், பேஸ்புக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கவுதம் கம்பீர் ரசிகர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தோனியுடன் கருத்து வேறுபாடு உள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ரசிகரின் கேள்விக்கு கவுதம் கம்பீர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;- “ தோனி சிறந்த வீரர், நல்ல மனிதர். எங்களுக்குள் மோதல் இல்லை.

    2007 டி-20 உலகக்கோப்பை வென்றது, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்றது உள்பட பல மகிழ்வான நேரங்களில் நாங்கள் ஒன்றாக இருந்துள்ளோம். அணியில் இடம்பெறாததில் வருத்தம் இல்லை. எனது பங்களிப்பில் நான் திருப்தியாகதான் உள்ளேன்.  அணியை வெற்றி பெற செய்வதே அனைவரது இலக்கு” என்றார்.
    Next Story
    ×