search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2.83 கோடி நிதி பயன்படுத்த பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
    X

    ரூ.2.83 கோடி நிதி பயன்படுத்த பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

    கிரிக்கெட் போட்டிகளுக்கு ரூ.2.83 கோடி நிதி பயன்படுத்த பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளையும் நடத்த ரூ.1.33 கோடி நிதி வழங்க அனுமதி தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு தாக்கல் செய்துள்ளது. பிசிசிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் பிற்பகல் 3 மணியளவில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்.  

    அதன்படி பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "இந்தியா-இங்கிலாந்து இடையிலான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 1.33 கோடி ஒதுக்கீடு செய்து கொள்ளலாம். 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளுக்கு ரூ.1.5 கோடி செலவு செய்யலாம்" எனக் கூறியுள்ளது. மொத்தமாக ரூ.2.83 கோடியை ஒதுக்கீடு செய்து கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×