search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கும் டோனி
    X

    இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கும் டோனி

    இங்கிலாந்துடன் இந்திய ‘ஏ’ அணி ஜனவரி 10 மற்றும் 12-ந்தேதி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் டோனி களம் இறங்குவார் என்று தெரிகிறது.
    ராஞ்சி:

    இந்திய ஒருநாள் போட்டி அணி கேப்டன் டோனி அக்டோபரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினர். அடுத்த மாதம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

    கடந்த 2½ மாதமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது ஜார்க்கண்ட் ரஞ்சி கிரிக்கெட் அணியுடன் அவர் பயிற்சி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் கேப்டன் டோனி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார். இங்கி லாந்துடன் இந்திய ‘ஏ’ அணி ஜனவரி 10 மற்றும் 12-ந்தேதி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் டோனி களம் இறங்குவார் என்று தெரிகிறது.

    Next Story
    ×