search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக். அணியில் தேர்வு செய்யாததற்கு ஐ.சி.சி. நிர்பந்தம் காரணமா?: முகமது ஆசிப் கேள்வி
    X

    பாக். அணியில் தேர்வு செய்யாததற்கு ஐ.சி.சி. நிர்பந்தம் காரணமா?: முகமது ஆசிப் கேள்வி

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுப்பட்ட முகமது ஆசிப் தான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யாததற்கு ஐ.சி.சி. நிர்பந்தம் காரணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2011-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது ‘ஸ்பாட்பிக்சிங்’ சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஆசிப், சல்மான் பட், முகமது அமீர் ஆகியோர் சிக்கினர்.

    இதனால் 3 பேருக்கும் விளையாட தடை விதிக்கப்பட்டது. முகமது ஆசிப்புக்கு ஐ.சி.சி. 7 ஆண்டுகள் தடை விதித்தது. அதன்பின் அவர் 2015-ம் ஆண்டு முதல் விளையாட ஐ.சி.சி. அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்.

    தடைகாலம் முடிந்து முகமது அமீர் தற்போது பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் முகமது ஆசிப், சல்மான்பட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் முகமது ஆசிப் அளித்த பேட்டியில் தான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறுகையில்,

    சில தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது. அது, பாகிஸ்தான் தேசிய அணியில் என்னை தேர்வு செய்ய பரிசீலிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கேட்டு கொண்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

    நான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். எனவே, ஐ.சி.சி. எனக்கு ஏதாவது கட்டுப்பாடு வைத்து இருக்கிறதா? என்று கேட்க உத்தேசித்து உள்ளேன்.

    என்னையும் சல்மான் பட்டையும் பயிற்சி முகாமுக்கு அழைத்து திறமையை பரிசோதித்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    நாம் வேகப்பந்து வீரர்களின் திறமைகளை பற்றி பேசி வருகிறோம். ஆனால் இப்போதுள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சிறப்பு திறமை இருப்பதாக நினைக்கவில்லை. அவர்களது பந்துவீச்சு சராசரியாகத்தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×