search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுவராஜ் திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடி
    X

    யுவராஜ் திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய விராட் கோலி- அனுஷ்கா சர்மா ஜோடி

    யுவராஜ் சிங்கின் திருமண நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொண்டார்.
    இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். 34 வயதாகும் இவர் மாடல் அழகியாக இருந்து பாலிவுட் நடிகையான ஹசல் கீச்சை (வயது 29) காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் கடந்த 30-ந்தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. கல்யாணத்திற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, இந்திய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஒட்டுமொத்தாக கலந்து கொண்டனர்.

    அதன்பின் நேற்று கோவாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விராட் கோலி, தனது பெண் தோழியான அனுஷ்கா சர்மாவுடன் ஒன்றாக கலந்து கொண்டார். அப்போது இருவரும் டான்ஸ் ஆடி கலக்கினார்கள். அனுஷ்கா சர்மா ‘செனோரிடா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். விராட் கோலி கங்னம் ஸ்டைலில் டான்ஸ் ஆடினார்.

    விராட் கோலி - அனுஷ்கா சர்மா இடையே நட்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெளிவில்லாமல் இருந்தது. இதில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டதன் மூலம் அவர்களின் நட்பு நீடிக்கிறது என்று தெளிவாக தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×