search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீச்சல் போட்டிக்காக தண்ணீரில் சீறிப்பாய்ந்த மாணவிகளை படத்தில் காணலாம்.
    X
    நீச்சல் போட்டிக்காக தண்ணீரில் சீறிப்பாய்ந்த மாணவிகளை படத்தில் காணலாம்.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை

    சேலத்தில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    சேலம் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பில் தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. தடகளம், தேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சேலம் காந்தி ஸ்டேடியத்திலும், கடற்கரை கைப்பந்து போட்டி சேலம் செயின்ட் ஜான் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் நடந்தது. தொடர்ந்து கைப்பந்து, ஜூடோ, பளுதூக்குதல், வாள் சண்டை சேலம் காந்தி ஸ்டேடியத்திலும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டியான நீச்சல் போட்டிகள் நேற்று சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்தது. இந்த போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மண்டல முதுநிலை மேலாளர் ஆர்.ராஜமகேந்திரன் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கே.கனகராஜ், நீச்சல் பயிற்சியாளர் வி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    1,500 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல், 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக், பிரஸ்டோக், பட்டர்பிளை ஆகிய நீச்சல் போட்டிகளும், 400 மீட்டர் தனிநபர் நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டது. இந்த நீச்சல் போட்டிகளில் முதல் இடங்களை பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    பெண்களுக்கான பிரிவில் 800 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில்-பாகிஷா பவுசியா, 200 மீட்டர் பிரஸ்டிரோக்- ஹிரோசிகா, 200 மீட்டர் பட்டர்பிளை-மகா அம்ரூதா, 200 மீட்டர் பேக் ஸ்டிரோக்-கேத்தன் பிரீத்தி, 400 மீட்டர் ஐ.எம்.(தனிநபர்)-ஜெயலட்சுமி, 100 மீட்டர் பிரஸ்டிரோக்-அபிதாம்பிகை, 100 மீட்டர் பட்டர்பிளை-தாரணி, 100 மீட்டர் பேக் ஸ்ே-டிராக்-அஸ்வின்ரோஸ்.

    ஆண்கள் பிரிவில் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இளமுகில் முதல் இடம் பெற்று சாதனை படைத்தார். 200 மீட்டர் பிரஸ்டிரோக்-சன்மதன், 200 மீட்டர் பட்டர்பிளை-அருண்பிரசாத், 200 மீட்டர் பேக் ஸ்டிரோக்-கமல்நாத், 400 மீட்டர் ஐ.எம்.(தனிநபர்)-லார்சன், 100 மீட்டர் பிரஸ்டிரோக்-தாமோதரக்கண்ணன், 100 மீட்டர் பட்டர்பிளை-கோகுல்குமார், 100 மீட்டர் பேக் ஸ்டிரோக்-சர்வேஸ் சின்னையா.

    கடந்த 24-ந் தேதி முதல் நேற்று வரை நடந்த பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்குகிறார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் வரவேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.
    Next Story
    ×