search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் சிட்னியில் நாளை நடக்கிறது
    X

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதும் ஒரு நாள் கிரிக்கெட் சிட்னியில் நாளை நடக்கிறது

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது குறித்த செய்தியை விவரமாக கீழே பார்க்கலாம்.
    சிட்னி :

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு சேப்பல்-ஹாட்லி கோப்பைக்கான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற கையோடு நியூசிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு விட்டனர். அதனால் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கண்பிரச்சினை காரணமாக ராஸ் டெய்லருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்டில், மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய லோக்கி பெர்குசன் ஆகிய புது வரவுகளை நியூசிலாந்து துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது முதல் 4 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (118 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (116 புள்ளி), நியூசிலாந்து (112 புள்ளி), இந்தியா (111 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. இந்த தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக வென்றால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும். நியூசிலாந்து 109 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரியும். அதே சமயம் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் ஆஸ்திரேலிய அணி 115 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு இறங்கும். நியூசிலாந்தின் புள்ளி எண்ணிக்கை 115 ஆக இருக்கும்.

    இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×